தியேட்டர்களில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்!

  0
  9
   தியேட்டர்

  தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

  சென்னை : சினிமா டிக்கெட் விற்பனையை அரசு கண்காணிக்க வகை செய்யும் ஆன்லைன் திட்டம் கொண்டுவரப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கூடுதல் சர்வீஸ் சார்ஜ் என்று தொடர் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டி  வருகின்றனர். 

  ticket

  இதற்கு தீர்வுகாணும் வகையில்,சினிமா டிக்கெட் விற்பனையை அரசு கண்காணிக்கும் வகையிலும், புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  kadambur

  இந்நிலையில் செய்தியாளர்களைச்  சந்தித்த  அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஒரு வாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் . அடுத்த கூட்டத்தில் தனியார் டிக்கெட் விற்பனையாளர்களை அழைத்துப் பேசவுள்ளோம்’ என்றார். இந்த திட்டத்தின் மூலம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை முறையே நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.