திமுக ரகசியங்களை சி.பி.ஐ.,யிடம் போட்டுக் கொடுத்த ப.சி..? திஹாருக்கு ஒற்றர் படையை அனுப்பிய மு.க.ஸ்டாலின்..?

  0
  3
  சிதம்பரம்

  ஐ.என்.எக்ஸ் மீடியா பணபேர வழக்கில்  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் நேரில் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சோனியா காந்தியின் மருமகன், ராபர்ட் வத்ரா மீதுள்ள ஊழல் புகார்கள் பெரும்பாலும் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நடைபெற்றது என்றும், அது பற்றி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் ஏதாவது கேட்டார்களா என அறிந்து கொள்ளவே இந்த சந்திப்பு நடந்ததாக டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

  இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திமுகவின் தூதுவர்களாக பாடலாசிரியர் வைரமுத்து, கிருஸ்துவ பேராயர் எஸ்ரா.சற்குனம் ஆகியோர் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்தது குறித்த ரகசியங்கள் தற்போது வெளி வந்துள்ள்து.  2004 முதல் 2014 வரை இருந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய இலாகாவை பெற்று, மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இதில் திமுக பெரும்பான்மையான முக்கிய அமைச்சர் பதவிகளை சிதம்பரம் மூலமாகவே திமுகவினர் பெற்றனர். 

  chidambaram

  10 ஆண்டுகளாக மத்தியில் அமைச்சரவையில் இருந்த திமுக மீது அடுக்கடுக்கான பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. குறிப்பாக நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா,  மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, திகார் சிறையில் அடைக்கபட்டனர்.  அதனால், 2016 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது.

  தற்போது மீண்டும் மத்திய அரசு 2ஜி ஊழல் வழக்கை தூசு தட்ட ஆரம்பித்துள்ளதால் திமுக தரப்பு ஆட்டம் கண்டுள்ளது.  ஏர்செல், மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி தயாநிதி மாறனின் வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அத்தோடு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, சேது சமுத்திர திட்டத்துக்கு ஒதுக்கிய பணத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும் அது பற்றி ஆவணங்களை சேகரிக்கும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

  காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, ஊழல் செய்ய திட்டமிட்டு, அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்ததே, அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.  திமுக செய்த ஊழல் அனைத்திலும் ப.சிதம்பரம் தனக்கு தேவையான பணத்தை பெற்று கொண்டார் என சுப்பிரமணியசுவாமி தெரிவித்திருந்தார். இதனால், மீண்டும் தூசு தட்டப்படும் 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் சிக்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.

  தங்களை சிபிஐ சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த திமுக, திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுகவின் முக்கிய புள்ளிகள் பற்றி ஏதேனும் சிபிஐ விசாரணையில் கூறினாரா? அல்லது சிபிஐ அதிகாரிகள் இது பற்றி ப.சிதம்பரத்திடம் ஏதேனும் கேள்வி கேட்டார்களா என அறிய, திமுகவின் தூதுவர்களாக வைரமுத்து, கிறித்தவ மதபோதகர் எஸ்ரா.சற்குணத்தை, திகார் சிறைக்கு அனுப்பி ப.சிதம்பரத்தை சந்திக்க திமுக தலைமை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.