திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

    0
    5
    பங்கு வர்த்தகம்

    அசுரன் குறித்து ஸ்டாலின் வாழ்த்து  கூறியதற்கு  நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். 

    அசுரன் குறித்து ஸ்டாலின் வாழ்த்து  கூறியதற்கு  நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். 

    வடசென்னையின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் மீண்டும்  திரைப்படம்  அசுரன்.  

    dhanush

    கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாதி அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை எந்தவொரு சாதியின் பெயரை குறிப்பிடாமலே அழுத்தமாகக் கூறியிருந்தார் வெற்றிமாறன். இதனால் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    asuran

    இதனிடையே இந்த படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அசுரன்  – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்’ என்று டிவிட்டரில் பதிவிட்டார்.

     

    இந்நிலையில் முக ஸ்டாலினின் வாழ்த்துக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.