திமுக டூப்ளிகேட் இயக்கம் – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

  0
  2
  EPS

  ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சர் கனவிலே இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் நான் முதலமைச்சரானார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.

  நாங்குநேரியில் நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் பழனிசாமி, “ நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது. திமுக அளித்த வாக்குறுதிகள் என்னவானது? எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.செய்ய முடியாத காரியங்களை எல்லாம் கூறி திமுக தலைவர் வாக்கு பெற்றார். 

  EPS

  ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சர் கனவிலே இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் நான் முதலமைச்சரானார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். நான் உண்மையைதான் பேசுகிறேன். ஸ்டாலின்தான் டூப்பு விடுகிறார். மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரி ஸ்டாலின்.  எதை எங்களால் செய்யமுடியுமோ… அதைதான் மக்களிடம் வாக்குறுதிகளாக கொடுத்தோம். திமுக டூப்ளிகேட் இயக்கம்” என்று பேசினார்.