‘திமுக கோடீஸ்வர கட்சி’ : அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் கருத்துகளை பாருங்க மக்களே !

  0
  2
  Minister Jayakumar

  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தொடங்கியுள்ளன.

  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தொடங்கியுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு அதிமுக ரூ.25 ஆயிரமும், திமுக ரூ.50 ஆயிரமும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. 

  Minister

  இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் வாக்கு கேட்கும் போது கடந்த ஆண்டு திமுக செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பேன் என்று கூறினார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. அதனால், உதயநிதி வாக்கு கேட்டாலும் மக்கள் அதிமுகவிற்குத் தான் வாக்களிப்பார்கள்’ என்று கூறினார். 

  Udhyanidhi

  அதனைத் தொடர்ந்து, அதிமுக கட்சி தான் தேர்தல் ஆணையரை இடமாற்றம் செய்து விட்டது என்று யாரோ கூறியதைச் சோதித்துக் கூட பார்க்காமல் அதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார் ஸ்டாலின். யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்துக் கூட பார்க்காமல் கையெழுத்துப் போட்டு அறிக்கை வெளியிடுகிறார். இதிலிருந்தே அவரது அறிவு பற்றித் தெரிகிறது. 

  MK Stalin

  ஆட்சியில் வெற்றிடம் நிலவினால் மக்கள் நோட்டாவுக்கு தான் ஓட்டுப் போட்டு இருப்பார்கள். ஆனால், மக்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்களுக்கு அதிமுக கட்சி மீது நம்பிக்கை இருப்பதால் தான் ஓட்டுப்போடுகிறார்கள். ஸ்டாலின் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது. திமுக பணக்கார கட்சி அதனால் தான் மேயர் பதவிக்கு ரூ.50 ஆயிரம் பணம், அதிமுக ஏழைக் கட்சி அதனால் நாங்கள் ரூ.25 ஆயிரம் நிர்ணயித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.