திமுக கூட்டணிக்கு ஆதரவு: அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கும் விஜய்

  0
  2
  மு.க. ஸ்டாலினுடன் விஜய்

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு   விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

  மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு   விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

  மக்களவை தேர்தல்

  ec

  நாடாளுமன்ற  தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

  திமுக கூட்டணி

  rahul ttn

  இந்த தேர்தலுக்காக திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

  மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசன்

  s venkatesan ttn

  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுரையில் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசன் சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல் கோட்டம்  நாவல் மற்றும் புகழ்பெற்ற வேள்பாரி போன்ற நூல்களை எழுதியவர் ஆவார். அதே சமயம் அதிமுக சார்பில் மதுரை மாவட்டச்செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் களம் இறக்கப்பட்டுள்ளார். 

  விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு!

  s venkatesan

  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே  விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் S.R.தங்கப்பாண்டி தனது இயக்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன்மூலம் விஜய் ரசிகர்களின் ஆதரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ளது.

  திமுக பக்கம் சாய்ந்த விஜய் 

  stalin ttn

  விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் விஜய்யின் தலையீடு இல்லாமல் இப்படி திடீரென்று ஆதரவு அளித்திருக்க மாட்டார்கள். அதனால் திமுக தலைமையின் கீழ் அமைந்துள்ள கூட்டணி கட்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்திருப்பது திமுக தலைமைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதற்கே என்று அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்களை கொளுத்தும் காட்சிக்கு அதிமுகவினர் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

  விஜய்யின் அரசியல் வியூகம்:

  vijay ttn

  அதிமுகவிடம் ஜெயலலிதா இருக்கும் போதிலிருந்தே  அடிக்கு மேல் அடி  வாங்கி நொந்து போன விஜய் தற்போது திமுக பக்கம் சாய்ந்துள்ளார். விஜய்யை பொறுத்தவரை, விஜய் மக்கள் இயக்கத்தை இந்த தேர்தலில் பிரதான கட்சிக்கு ஆதரவு அளித்து, களப்பணியில்  இறக்குவதன் மூலம், எதிர்காலத்தில் மக்கள் இயக்கத்தின் செல்வாக்கு எந்தளவு உயர்ந்துள்ளது என்றும் அதை வைத்து அரசியலில் ஆழம் பார்க்கலாம் என்று வியூகம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.