திமுக அடிப்படை உறுப்பினரா..? இதை மட்டும் செய்தால் போதும்… நீங்களும் அசைக்க முடியாத விஐபி ஆகி விடலாம்..!

  0
  2
  ஸ்டாலின்

  வாரிசுகளை ஐஸ் வைத்தால் போதும். கட்சியில் முன்னேறிடலாம் என்கிற எண்ணம் வந்துவிட்டது என புழுங்குகிறார்கள்.

  திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு சிரியாய் சிரிக்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.  விக்கிரவாண்டி, தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து மாம்பழப்பட்டு ஊராட்சி தி.மு.க., சார்பில் எழுதிய சுவர் விளம்பரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி  ஆகியோரின் பெயர்களை பெருதாக எழுதி இருக்கிறார்கள்.

  அடுத்த வரிசையில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியும், அவரது மகன் கவுதம சிகாமணி, எம்.பி., பெயரும் இருக்கிறது. ஆனால், மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதி பெயர் இடம்பெறவே இல்லை. இதைப் பார்த்து, கட்சியின் மூத்த தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள். வாரிசுகளை ஐஸ் வைத்தால் போதும். கட்சியில் முன்னேறிடலாம் என்கிற எண்ணம் வந்துவிட்டது என புழுங்குகிறார்கள். 

  விக்கிரவாண்டி தொகுதியில், வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கப் போகிறது.  விழுப்புரம் மாவட்ட, தி.மு.க., பொருளாளர் புகழேந்தியும், அ.தி.மு.க.,வில் காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

  இருவருமே பண பலம் இல்லாதவர்கள். புகழேந்தி, பொன்முடி தயவிலும், முத்தமிழ்ச்செல்வன், அமைச்சர் சி.வி.சண்முகம் தயவிலும் சீட் வாங்கினார்கள். இதனால் அவர்கள் மூலம், தலைமையில் இருந்து பொருளுதவி கிடைக்கும் என இரு தரப்புமே எதிர்பார்த்து, காத்துக் கிடக்கிறது.