திமுகவை கேவலப்படுத்திய ஹெச்.ராஜா… பட்டியல் போட்டு நெத்தியடி..!

  0
  1
  ஹெச்.ராஜா

  லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான் திராவிட அரசியல்!

  பேசுவதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு அரசியல் செய்வது தான் திராவிட அரசியல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

  இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’திராவிட அரசியல் என்பது… இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே… கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும். சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும், அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான் திராவிட அரசியல்!

  stalin

  கர்நாடகாவிடமிருந்து  தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக் கொண்டே ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்…

  லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான்” என அவர் தெரிவித்துள்ளார்.