திமுகவில் இணைந்தார் எடப்பாடியின் பெரியம்மா மகன் !

  13
  Viswanathan

  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார்.

  புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமார், ‘ எம்.ஜி ஆருக்கு அடுத்ததாக நான் ரசித்த தலைவன் மு.க ஸ்டாலின் தான். அவர் விரைவில் அரியணை ஏறுவார் என்று தெரிவித்திருந்தார்.

  ttn

  இது பா.ஜ.க கட்சியினரிடையே பெரும்  சலசலப்பை  ஏற்படுத்தியது. அதன் பிறகு இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினைச் சந்தித்த அரசகுமார் திமுகவில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் பேட்டியளித்த அரசகுமார், ‘என் தலைவனைப் பற்றிப் பேசியதற்காக என் வாழ்நாளிலே சந்திக்காத இன்னல்களைச் சந்தித்தேன். இப்போது நான் மீண்டும் தாயகம் திரும்பி விட்டேன்’ என்று தெரிவித்தார். 

  ttn

  இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார்.இதில், சேலம் மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விஸ்வநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், ‘மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லாததால் திமுகவில் இணைந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.