திமுகவிடம் கம்யூனிஸ்டு வாங்கிய 25 கோடி… நல்லகண்ணு வசிப்பதோ தெருக்கோடி..!

  49
  Nallakannu

  தங்கள் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை மக்களின் வரிப்பணத்தில், அரசுக்கு சொந்தமான ஒரு வீட்டில் வசிக்க வைக்க காரணம் என்ன?

  சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு தான் அரசு ஒதுக்கிய வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 12 வருடங்களாக வசித்து வந்தார். இந்நிலையில் அங்கே இருக்கும் குடியிருப்புகள் இடியும் தருவாயில் இருந்தததால், குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது. நல்லகண்ணுக்கு புதிய வீடு தமிழக அரசு ஒதுக்கியது.

  இப்படி அரசு ஒதுக்கிய வீட்டில் எளிமையாக வசித்து வரும் நல்லகண்ணு சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களவை தேர்தலில் திமுகவிடன் கூட்டணி வைத்து, 25 கோடி தேர்தல் செலவுக்கு நிதி உதவி பெற்றது அம்பலமாகி இருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் செலவு குறித்து தாக்கல் செய்த பத்திரத்தில், இந்தியா முழுவதும் 8 கோடிக்கும் குறைவாகவே தங்கள் கட்சி செலவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் போட்டியிட்ட 4 தொகுதிகளுக்கு மட்டுமே 25 கோடி தேர்தல் நிதியாக திமுகவிடம் இருந்து பெற்றுள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகள்.

  nallakannu

  தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இந்த தொகையானது மூன்று தவணைகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தவணைகளிலும் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

  இந்த தேர்தலில், 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட கம்யூனிஸ்டுகள், 25 கோடி ரூபாய் பெற்றுள்ளது என்றால், இதற்கு முன் நடந்த தேர்தலில் எவ்வளவு பணம் பெற்று கொண்டிருப்பார்கள்? இவ்வளவு பணத்தையும் பெற்று கொண்டு, தெரு கடைகளில் உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்து, தாங்கள் ஒரு ஏழ்மையான கட்சி என்று ஏன் மக்கள் மனதில் பதிய வைக்கின்றனர்?

  கோடிகளில் தேர்தல் நிதியை பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களின் சென்னை அலுவலகத்தை 20 கோடிக்கு கட்டிக் கொள்ள பண வசதி படைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்,  தங்கள் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை மக்களின் வரிப்பணத்தில், அரசுக்கு சொந்தமான ஒரு வீட்டில் வசிக்க வைக்க காரணம் என்ன? என்று மக்கள் கேள்விக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.