திபெத்தியர்களின் ஃபேவரைட் ஐட்டம்… நாமளே வீட்டில் செய்து சாப்பிடலாம்..!

  0
  2
  நூடுல்ஸ்

  குளிர் அல்லது மழை காலங்களில், பிளாக் டீ , சுக்கு காஃபி என ஏதாவது ஒன்றை சூடாக குடிக்க வேண்டும் போல் எல்லோருக்கும் தோன்றும்.எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான பானங்களைக் குடிப்பதற்குப் பதிலாக ஏன் நீங்க  ‘துப்கா சூப்’ செய்து குடிக்கக்கூடாது!? பேரைக் கேட்கும்போதே பீதியைக் கிளப்புறமாதிரி இருக்கா! பயப்படாதீங்க திபெத் ஏரியாவில் இந்த சூப் செம பேமஸ். இந்த சூப்பில் நமது உடலை குளிரில் பாதுகாப்பதோடு, உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை உண்டாக்கும்.

  soup

  திபெத்தியர்கள், இந்தியாவில் குடியேறிய பிறகு இந்த சூப் செய்முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.இது தற்போது இந்தியாவில் உள்ள எல்லா ஸ்டார் ஹோட்டல்களிலும் கிடைக்கிறது.ஒரு சூப் சாப்பிடறதுக்காக சொத்தை எழுதி வைக்க முடியாதல்லவா..! ஸோ… வீட்டிலேயே செஞ்சு பார்த்து டேஸ்ட் பண்ணுங்க.

  துப்கா சூப்பின் நன்மைகளை பார்ப்போம்;

  1.துப்கா சூப்பில் ப்ரோடீன் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது,இதில் சேர்க்கப்படும் சிக்கன்,காய்கறிகள் ஆகியவை அதிக நன்மைகளை தரும்.

  2.இதில் சேர்க்கப்படும் இஞ்சி,மிளகு ஆகியவை குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  ginger

  3.இதில் சேர்க்கப்படும் கேரட் அகிகளவு ஆன்டி ஆக்சிடண்டுகளை தருவதோடும்,உடலில் சேரும் பீரியாட்டிக்கல்ஸையும் எதிர்த்து போராட உதவும்.

  4.சூப்பில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் உடலின் மெட்டபாளிக் திறனை அதிகரிக்கும்.

  5.இதில் சேர்க்கப்படும் முட்டை கோஸ் உங்கள் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு மலச்சிக்கலையும் தீர்க்கும். 

  cabbage

  துப்கா சூப் குளிக்காலத்தில் சாப்பிடக்கூடிய ஒரு நல்ல உணவாகும்,இதில் கலோரிக்கள் அதிகம் என்பதால் இதனை அளவாகவே சாப்பிடவேண்டும் .
  மேலும் இதனை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

  செய்ய தேவையான பொருட்கள்:

  1.அரிசி நூடுல்ஸ் – 300கி 
  2.சிக்கன் வேகவைத்து எடுத்த தண்ணீர்(மசாலா சேர்க்கப்பட்டு சமைத்த தண்ணீர்) – 6 கப் 

  noodle

  3.சிக்கன் தொடைகள் – 300கி 
  4.விஜிடபிள் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் 
  5.கேரட் – 100கி 

  chicken

  6.கொத்தமல்லி தழை – 1 கொத்து 
  7.கிராம்பு,பூண்டு – 2
  8.இஞ்சி – 1 டீஸ் ஸ்பூன் 
  9.சீராக தூள் – 1/2 டீஸ் ஸ்பூன் 

  carrot

  10.பெருங்காயம் – 2 சிட்டிகை 
  11.தண்ணீர் தேவையான அளவு 

  செய்முறை:

  முதலில்,சூப்பிற்கு தேவையான பேஸ்டை செய்துகொள்ளவும் இதற்கு இஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம் பெருங்காயம் ஆகியவைகளை நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளளுங்கள்.அதன் பிறகு,ஒரு வானிலையில் எண்ணெய்யை ஊற்றி அதில் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், அதில் சிக்கன் தண்ணீரை ஊற்றி.. குறைந்த நெருப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  chicken

  கொதி வந்ததும்  சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.(சிக்கன் வேகவைக்கும் முறை – நீங்கள் சேர்க்கும் சேர்மானங்களை சேர்த்து எப்போதும் போல செய்யும் முறைதான்). இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் பாதி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைக்கவும்,நூடுல்ஸ் வெந்ததும் அதனை தனியே மாற்றி வைத்துகொள்ளவும்,கேரட்டையும் வேகவைத்துக்கொள்ளவும்.

  tupka

  யார் யாருக்கு எவ்வளவு  நூடுல்ஸ் சாப்பாட்டுவார்கள் என்று தேவையான அளவை  பௌலில் பிரித்துவைத்து, அதில் செய்துவைத்த சிக்கன் சூப்பை சேர்த்து சூடாக பரிமாறவும். குளிர்காலத்திற்கேற்ற சூடான துப்கா சூப் ரெடி!