தினந்தந்தி அச்சகத்தில் தீ விபத்து | கோடிக்கணக்கில் நாசம்! | வீடியோ இணைப்பு

  0
  1
  சேலம் பிரியாணி

  திருச்சி தினத்தந்தி நாளிதழுக்கு  திருச்சி- தஞ்சை சாலையில் துவாக்குடி சிப்காட் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக புதிய அச்சகம் திறக்கப்பட்டது. இங்கு திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கான தினந்தந்தி நாளிதழ் அச்சிடப்பட்டு வந்தது. நவீன இயந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த அச்சகம் கடந்த 2 மாதத்திற்கு முன்தான் பயன்பாட்டிற்கு வந்து, தொடர்ந்து இயங்கி வந்தது.

  dinathanthi

  இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அந்த அச்சகத்தில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான இயந்திரங்கள், பேப்பர் பண்டல்கள் நாசமானதாக கூறப்படுகிறது. துவாக்குடி,நவல்பட்டு திருவெறும்பூர், உள்ளிட்ட இடங்களிலிருந்து  வந்த தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.