திடீரென சரிந்தது தங்க விலை…மூன்று நாளில் இவ்வளவு குறைந்துவிட்டதா?!

  32
  gold

  தங்க விலை கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்ததைத் தொடர்ந்து இன்று சரிந்துள்ளது. 

  இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. தொடர்ந்து மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இந்நிலையில் தங்க விலை கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்ததைத் தொடர்ந்து இன்று சரிந்துள்ளது. 

  ttn

  இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.137 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,020க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.32,160க்கு விற்கப்படுகிறது.கடந்த 3 நாட்களில் தங்க விலை ரூ.1,552 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

  மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.45.90க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.3,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.45,900க்கு விற்கப்படுகிறது.