திடீரென்று பேசிய சிசிடிவி ! அதிர்ந்து போன 5 வயது குழந்தை !

  0
  4
  மாதிரி படம்

  அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டுள் கேமரா ஒன்றில் இருந்து ஒருவர் பேசியதால் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.

  cctv

  அமெரிக்காவில் உள்ள நெபரஸ்கா நகரத்தில் ஒரு வீட்டில் அமேசான் ரிங்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்த குழந்தை டிவி பர்த்துக்கொண்டிருந்தபோது, அந்த கேமராவில் இருந்து ஒருவர் பேசும் குரல் கேட்டது. இதனால் பயந்து போன குழந்தை அந்த கேமராவை முறைத்து பார்க்க, மீண்டும் கேமராவில் இருந்து வந்த குரல் டிவியில் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார் என கேட்கிறது. மேலும் உன்னிடம்தான் கேட்கிறேன். பதில் சொல்ல முடியாதா என கேட்கும் அதே வேளையில் அந்த குழந்தையின் தந்தை வீட்டிற்குள் வருகிறார். அவரை பார்த்தும் கேமராவில் இருந்து அலோ என்ற குரல் வருகிறது.

  உடனே அவர் கேமராவை பார்த்து நீங்கள் யார் என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை கேமராவை யாராவது ஹேக் செய்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்குக் காரணம் கேமரா சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் நம்மை எளிதாக கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. திருடர்களிடம் தப்பிக்க பாதுகாப்பு கேமரா பொருத்தப்பட்ட நிலையில், நம்மை பாதுகாப்பவர்களே நம்மை கண்காணிக்கிறார்களோ என்ற அச்சம் அமெரிக்க மக்கள் மத்தியில் வலம் வருகிறது.