திடீரென்று உடைந்து விழுந்த கான்கிரீட் துண்டு: உயிர் தப்பிய பிரபல நடிகை!?

  18
  நடிகை அர்ச்சனா கவி

  மேம்பாலத்திலிருந்து கான்கிரீட் துண்டு ஒன்று காரின் மீது விழுந்த விபத்தில் நடிகை அர்ச்சனா கவி உயிர் பிழைத்துள்ளார். 

  கொச்சி : மேம்பாலத்திலிருந்து கான்கிரீட் துண்டு ஒன்று காரின் மீது விழுந்த விபத்தில் நடிகை அர்ச்சனா கவி உயிர் பிழைத்துள்ளார். 

  archana

  நடிகை அர்ச்சனா கவி தமிழில், அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்தவர். மலையாள நடிகையான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் அபிஷ் மாத்யூவை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். 

  archana

  இந்நிலையில் அர்ச்சனா கவி  நேற்று  வாடகை காரில் கொச்சி விமான நிலையத்துக்குத் தனது தந்தையுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் கொச்சி மெட்ரோ பாலத்துக்குக் கீழே சென்றபோது, மேம்பாலத்திலிருந்து கான்கிரீட் துண்டு ஒன்று விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொல்லிப் பார்த்தபோது  காரின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு, கான்கிரீட் துண்டு காரின் சீட்டில் கிடந்தது. 

   

  இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கவி, அந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இது போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

   

  இதற்குப் பதிலளித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், ‘அந்த டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இது குறித்து விசாரித்து வருகிறோம். சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பதிலளித்துள்ளனர்.