திக்விஜய் சிங் உள்ளிட்டோருக்கு ராஜ்யசபா சீட்! – வெளியானது காங். பட்டியல்

  0
  1
  Rajya Sabha election

  மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.

  congress

  இதன் படி, சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கே.டி.எஸ்.துள்சி, பூலோதேவி நேதாம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஷாஸதா அன்வார், மத்திய பிரதேசத்தில் இருந்து திக்விஜய் சிங், பூல்சிங் பரையா, மகாராஷ்டிராவில் இருந்து ராஜிவ் சதாவ்,  ராஜஸ்தானிலிருந்து கே.சி.வேணுகோபால், நீரஜ் டங்கி, மேகாலயாவிலிருந்து கென்னடி ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அரியானாவிலிருந்து ஹூடா, குஜராத்திலிருந்து சக்திசிங் கோகில், பாரத்சிங் சோலங்கி ஆகியோர் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது எம்.பி பதவி யாருக்கு என்பதில் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் பெயரை அறிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.