தாய்லாந்தில் இறந்த இந்திய பெண்… 2 லட்ச ரூபாய் செலவு செய்த மத்திய அரசு!

  0
  10
   இந்திய பெண்

  அந்த குடும்பத்திற்கு அப்போது தான் விடிவு காலம் பிறக்கத் துவங்கியது. தங்களது ஒரே மகளான பிரக்யா சாப்ட்வேட் படிப்பை முடித்து விட்டு, பெங்களூருவில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். கைநிறைய சம்பளம். குடும்பம் பொருளாதார ரீதியாக கொஞ்சம் சுவாசிக்க ஆரம்பித்தது. குடும்பத்தில் முதல் பட்டதாரி நபர் பிரக்யா தான்.

  அந்த குடும்பத்திற்கு அப்போது தான் விடிவு காலம் பிறக்கத் துவங்கியது. தங்களது ஒரே மகளான பிரக்யா சாப்ட்வேட் படிப்பை முடித்து விட்டு, பெங்களூருவில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். கைநிறைய சம்பளம். குடும்பம் பொருளாதார ரீதியாக கொஞ்சம் சுவாசிக்க ஆரம்பித்தது. குடும்பத்தில் முதல் பட்டதாரி நபர் பிரக்யா தான். இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து கருந்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 8 ம் தேதி தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு சென்றிருந்தார் பிரக்யா. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நடந்த சாலை விபத்தில் பிரக்யா உயிரிழந்தார்.

  piyaga

  ஒரே மகள் இறந்து துயரம் ஒருபக்கம் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், வேறு குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் உடனே தாய்லாந்துக்கு சென்று பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை இன்னும் துயரத்தை ஏற்படுத்தியது. 
  அவரது குடும்பத்தினரின் இந்த நிலை குறித்த செய்திகள் சமூகவலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தும் பிரக்யா குடும்பத்துக்கு உதவுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் தனியார் நிறுவனம் மூலம் பிரக்யாவின் உடலை மத்திய அரசு, இந்தியா கொண்டு வந்தது. டெல்லி வந்தடைந்த உடல், மத்தியப்பிரதேச அரசு உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சடர்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் நேற்று மாலை பிரக்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.