தாமரை மலர்ந்தே தீரும் – டைம்ஸ் நவ் கணிப்பு

  13
  பாஜக

  இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒவ்வொன்றாக வரத்துவங்கி உள்ளன. டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர். கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய தேர்தலைப்போலவே மோசமான தோல்வியை காங்கிரஸ் கூட்டணி பதிவு

  இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒவ்வொன்றாக வரத்துவங்கி உள்ளன. டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர். கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய தேர்தலைப்போலவே மோசமான தோல்வியை காங்கிரஸ் கூட்டணி பதிவு செய்திருக்கிறது. டைம்ஸ் நவ் கணிப்பின்படி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெறும் 132 இடங்களில் மட்டுமே வெல்ல இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  bjp

  வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, பாஜக அணி முந்தைய தேர்தலை காட்டிலும் சற்றே கூடுதலாக 41.1% வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் அணிக்கு வெறும் 31.7% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத‌ சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட்கள் மொத்தம் 27.2% வாக்குகளை பெற வாய்ப்பிருப்பதாகவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  dmk

  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக கூட்டணிக்கு 29 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக‌ இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி 9 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது. 

  டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட கருத்துகணிப்பு முடிவுகளைப்போல, பிற முன்னணி நிறுவனங்கள் வெளியிடும் முடிவுகளையும் தொடர்ந்து உங்களுக்கு அளிக்க இருக்கிறோம்.

  சட்டபூர்வ எச்சரிக்கை: அன்பு வாசகர்களே, இந்த எக்சிட் போல் கணிப்புகளை முக்கிய தொலைகாட்சி நிறுவனங்கள் பிற தனியார் நிறுவனங்களோடு இணைந்து எடுத்து வெளியிட்டுள்ளன. மே 23ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிடும்போது ஒருவேளை இந்த கணிப்புகளுக்கு நேர்மாறாக முடிவுகள் இருந்தால், மக்களே எங்களை சந்தேகப்படாதீங்க.