தவறான தகவல்களை பரப்பாதீர்கள் எனக்கூறிய சாக்‌ஷிக்கு பதில் கூறிவிட்டு இன்ஸ்டாகிராமை இழுத்து மூடிய அபிராமி!

  0
  1
  abi

  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் 16 போட்டியாளர்கள் முதலில் கலந்துகொண்டனர்

  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் 16 போட்டியாளர்கள் முதலில் கலந்துகொண்டனர். அவர்களில் ஒவ்வொருவாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு 7 பேர் தற்போது உள்ளனர். இந்நிலையில் இதில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவரான,  சாக்‌ஷிக்கும் அபிராமிக்கு சிறிய சோஷியல் மீடியா சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியபின் அபிராமி மற்ற ஹவுஸ் மேட்ஸ்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்துத்து வருகிறார். 

  sakshi

  இந்நிலையில் சாக்‌ஷி,  அவரது ட்விட்டர் பக்கத்தில், “சிலர் பிக்பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களை சந்தித்து தவறான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மற்ற போட்டியாளர்களை சந்திக்கும்போது நல்ல விஷயங்களையும், அவர்கள் வாழ்வில் முன்னேற தேவையான கருத்துக்களை மட்டும் கூறுங்கள்… சுயநலமாக இருக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார். 

  abirami

  இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகை அபிராமி, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்“பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்…. பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் தற்போது வெளியே வந்துவிட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தற்போது படப்பிடிப்பிலும், எனது வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என பதிவிட்டு அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டையே டெலிட் செய்துவிட்டார்.