தள்ளிப்போகிறது சிம்புவின் மாநாடு திரைப்படம்! காரணம் இது தான்

  11
  நடிகர் சிம்பு

  நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் தேதி ஒத்திவைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் தேதி ஒத்திவைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘வந்தா நாஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். 

  இந்த படத்துக்காக வெளிநாட்டில் தங்கி தன்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு. மேலும், தற்காப்புக் கலைகளையும் கற்றுவருவதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் பயற்சி பெற்றுவந்த சிம்பு தனது தம்பி குறளரசனின் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார். 

  str

  அப்போது அவரைச் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் லொகேஷன் தேடும் பணியில் சில தாமதம் ஏற்படுவதால் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்.21ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.