‘தளபதி 64’ படத்தை கைவிட்ட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ!? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  0
  1
  தளபதி 64

  பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

  ‘தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  vijay

  பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

  vijay

  இந்நிலையில் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு பதிலாக லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேவியர் பிரிட்டோ விஜய்யின் உறவினர் ஆவார்.

  xavier

  தற்போது படக்குழுவுக்கும் சேவியர் பிரிட்டோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு பணியிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

  தற்போது தளபதி 64 படப்பிடிப்பு குரோம்பேட்டை இந்திரா காட்டன் மில்லில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.