‘தளபதி 63’ ஷூட்டிங் ப்ளான் இதோ..!

  0
  1
  தளபதி 64

  தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் ப்ளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் ப்ளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் செட் அமைக்கும் காட்சிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

  விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை தொடங்க இயக்குநர் அட்லி ஆயத்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

  thalapathyvijay

  பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், ஜன.20ம் தேதி சிறப்பு பூஜைக்கு படத் தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜன.21ம் தேதி முதல் ஷூட்டிங் பணிகளை தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

  இப்படத்தில் பெண்கள் விளையாடும் அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.