தல 61: மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கும் அஜித்?

  0
  6
  அஜித்

  தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

  தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதைத்தொடர்ந்து  மீண்டும் நேர்கொண்ட பார்வை பட  இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

  இந்த நிலையில் தற்போது தல 61 படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் சமீபத்தில் தேசிய விருது பெற்ற பாலிவுட் திரைப்படமான ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

  ajith

   இந்த படத்தின் உரிமை போனிகபூரிடம் இருந்தாலும் தமிழில் வேறு ஒரு தயாரிப்பாளர் இந்த படத்தின் உரிமையைப் பெற்று தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அஜித் இது தனது இமேஜுக்கு ஏற்றவாறு வித்தியாசமான கதையம்சத்துடன் இருப்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.