தல 59 படத்தில் இணைந்த பிரபல நடிகை

  0
  5
  வலிமை

  தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார்

  சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.  இதையடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

  கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளியான ‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது தல அஜித்துடன் அவர் இணையும் 7-வது படமாகும். 

  இந்த படத்தில் 3 கதாநாயகிகள். அதில் ஒருவராக நீண்ட இடைவெளிக்கு பின் நஸ்ரியா நடிக்கிறார். மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில்,  ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  vidya balan

  மேலும், இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்குநர் வினோத், திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், இப் படம் வித்யா பாலனுக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.