தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: நெல்லையில் பரபரப்பு!

  0
  2
  மணிகண்டன்

  கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  நெல்லை: கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  நெல்லை சந்திப்பு அருகிலுள்ள கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

  murder

  இந்நிலையில் மணிகண்டன், சக கட்டிட தொழிலாளியான மாரியப்பன், கணேசன், சரவணன் ஆகியோருடன்  நேற்று இரவு கருப்பந்துறை பிரதான சாலையில்  நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் மணிகண்டனை சரமாரியாக வெட்டியது. இதில் மணிகண்டனின்  கால் துண்டானதோடு, தலையும் வெட்டப்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்து போனார். அந்த கும்பல்  மாரியப்பனையும் வெட்டியுள்ளார்கள். இதில் அவர் அவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சாலையில் விழுந்தார். மற்ற 2 பேரும் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

  murder

  இதையடுத்து அங்கு திரண்ட  மணிகண்டனின் உறவினர்கள் கதறி அழுதனர்.  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேசிய போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மணிகண்டனின் உடல் மற்றும் மாரியப்பனை  மீட்டு  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  killed

  இருப்பினும் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளாகம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும், இக்கிராமத்தினருக்கும் இடையே   பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால் இதுபோன்ற அசம்பாவிதத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

  இந்த கொடூர கொலை தொடர்பாகக்  குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க  4  தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.