‘தலைவி’ படத்தில் ஜெமினி கணேசன் வேடத்தில் பிரபல நடிகர்!

  0
  1
   தலைவி

  இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்று  படத்தை தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

  ttn

  நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என நான்கு மொழிகளில்  உருவாகி வரும் இப்படம் தமிழில் தலைவி என்றும் மலையாளத்தில் ஜெயா என்ற பெயரிலும் பெயரிடப்பட்டுள்ளது.

  ttn

  இந்நிலையில் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ttn

  ஏற்கனவே மகாநடி  படத்தில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் வேடத்தில் பிரமாதமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.