‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை!?

    11
    தலைவி

    இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்று  படத்தை தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    ttn

    நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

    ttn

    இந்நிலையில் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுக்கால தோழியாக ஜெயலலிதாவுடன் பயணித்த சசிகலா கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது சசிகலா பாத்திரத்திற்கு பிரியாமணி பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    ttn

    முன்னதாக இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.