தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! முதலில் அம்மாவுக்கு ஜோடி… தற்போது பொன்னுக்கு ஜோடி!!

  0
  6
  Keerthi suresh

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

  Rajinikanth 

  இந்நிலையில் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மேனகா. இவரின் மகள்தான் கீர்த்து சுரேஷ். இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு முன் அம்மாவுடன் ஜோடியாக நடித்த ரஜினி தற்போது மகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.  69 வயதாகும் ரஜினி 27 வயதாகும் கீர்த்தி சுரேஷுடன் நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.