தலைவர் 168 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?

  0
  1
  தலைவர் 168

  ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

  ரஜினியின் 168-வது படத்துக்கு இமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

  rajini

  இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

  imran

  இந்நிலையில் தலைவர் 168 படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சிவா – அஜித் கூட்டணியில் உருவான விஸ்வாசம் படத்துக்கு டி. இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்த நிலையில் தற்போது  தலைவர் 168 படத்துக்கும் அவரே இசையமைப்பார் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.