தலையணைக்கு அடியில் வைத்த மொபைல் வெடித்து இளைஞர் பலி!

  0
  39
  Mobile

  தலையணைக்கு அடியில் செல்போனை வைத்து சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

  தலையணைக்கு அடியில் செல்போனை வைத்து சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

  ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டத்திலுள்ள ரான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குணா பிரதான். இவர் ஜகந்நாத் கோவில் கட்டுமானத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வேலை முடிந்த பின் சக தொழிலாளர்களுடன் அறைக்கு சென்ற குணா, செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அதனை தலையணைக்கு அடியில் வைத்துள்ளார். அதிகாலை 5 மணியளவில் போன் வெடித்ததில் குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

  cellphone

  தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் குணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சார்ஜ் போடும்போது அதிக அளவு மின்சாரம் பேட்டரிக்கு செல்லக்கூடும், இதனால் பேட்டரி சூடாகி செல்போன் வெடித்திருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் தலையணைக்கு கீழே செல்போன்களை வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.