தலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

  0
  1
  பூஜா

  விலைமதிக்க முடியாத உயிர் இன்றும் சில நேரங்களில் கவனக்குறைவால் பறிபோய் விடுகிறது. இப்படி சின்ன கவனக்குறைவினால் உயிர்  போகும் நிலை ஏழை, பணக்காரன் என்கிற பேதங்களை எல்லாம் பார்ப்பதில்லை. விதி என்று எடுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிச் சென்று விடுகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியும், மருத்துவ வசதிகளும் எவ்வளவோ எளிமையாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்திலும் பிரசவத்தில் பிரபல நடிகை உயிரிழந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  actress poojai

  மராத்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூஜா. 25 வயதே ஆன இவர் நடித்திருந்தது சில படங்களே ஆனாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்திருந்தார். திரையுலகில் அபிமான நாயகியாக வலம் வந்தாலும், புகழின் உச்சியில் இருக்கும் போதே திருமணமும் செய்துக் கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடிகை பூஜா, பிரசவத்திற்காக தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நடிகை பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் பிரசவம் பார்த்த போது, அவருக்கு பிறந்த குழந்தை அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. பிரசவம் முடிந்த அடுத்த சில வினாடிகளில் பூஜாவின் உடல் நிலை மிகவும் மோசமானது.
  இதையடுத்து மருத்துவர்கள், உடனடியாக ஹிங்கோலி சிவில் ஹெல்த் செண்டருக்கு பூஜாவைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஹிங்கோலி செல்வதற்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர். ஒருவர் சுமார் ஒரு மணி நேரமாக அவர்கள் காத்திருந்த பின்னர் ஆம்புலன்ஸ் கிடைத்தது. அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு நடிகை பூஜாவைக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைத்திருந்தால் பூஜா உயிர் பிழைத்திருப்பார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தலை பிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜாவின் மரணம் மராட்டிய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.