தலயும் தளபதியும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!

  0
  1
  Fans Fight

  அஜீத் ரசிகர் உமாசங்கருக்கும், விஜய் ரசிகர் ரோஷனுக்கும் இடையில் யார் பெரிய நடிகர் என்ற சண்டை வாய்த்தகராறில் ஆரம்பித்து கத்திக்குத்தாய்ப் போய் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கத்திக்குத்தோடு, மற்றொன்று சிறையில் குத்திய கத்தியோடு.

  முகப்புப்பக்கம் டிக்கெட் கவுண்ட்டர்கள் இல்லாமல், கொஞ்சம் மறைவாக பக்கவாட்டில் இருக்கும் சென்னை தியேட்டர்களின் சுவர்களை உற்றுப்பார்த்தால், கண்கூசும். டைல்ஸ்களின் வெளிச்சத்தினால் அல்ல, நடிகர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களை அருவெறுக்கத்தக்க மொழியில் வர்ணித்து எழுதியிருப்பதைப் பார்த்து. அதுவும் விஜய், அஜீத் ரசிகர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அஜீத் குடும்பத்தை தரக்குறைவாக விஜய் ரசிகர்கள் எழுதுவதும், விஜய் குடும்பத்தை அஜீத் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பதும் என எதுகை மோனையில் விளையாடியிருப்பார்கள். ஆழ்ந்து கவனித்தால், அவர்களின் ஆதர்சங்களாக போற்றக்கூடிய நடிகர்களின் பெருந்தன்மையோ, புரிதலோ, அவர்களுக்குள் இருக்கும் நட்புறவில் ஒரு சதவீதம்கூட அவர்களின் ரசிகர்களுக்கு இல்லாதது புரியும்.

  Vijay Ajith in deep understanding

  இலங்கையில் இருந்து தப்பிவந்து இங்கே குடியுரிமைகூட இல்லாமல் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் இரு தமிழ் நண்பர்களுக்குள் அஜீத் விஜயை வைத்து சண்டை வந்து வெட்டுக்குத்தில் போய் முடிந்திருக்கிறது. சென்னை புழல் அருகே இருக்கும் அகதிகள் முகாமில் வசித்துவரும் அஜீத் ரசிகர் உமாசங்கருக்கும், விஜய் ரசிகர் ரோஷனுக்கும் இடையில் யார் பெரிய நடிகர் என்ற சண்டை வாய்த்தகராறில் ஆரம்பித்து கத்திக்குத்தாய்ப் போய் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கத்திக்குத்தோடு, மற்றொன்று சிறையில் குத்திய கத்தியோடு. ரோஷன் கத்தியால் குத்திய உமாசங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். தலயும் தளபதியும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு!