’தல’க்கு வகுப்பெடுத்த மகள் வீடியோ… தோனிக்காக ஓ.பி.எஸ் மகன் செய்த தரமான சம்பவம்..!

  0
  1
  தோனி

  மகள் ஸிவாவுடன் சேர்ந்து தோனி புது வகையான டான்ஸ் ஆடினார். மகள் ஆடியதை போலவே ஆடி அசத்தினார்.

  சி.எஸ்.கே சிங்கம் மஹேந்திர சிங் தோனி தனது மகள் ஸிவாவுடன் கலக்கல் ஆட்டம் போட்டு தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். 

   

  View this post on Instagram

  A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on Jul 6, 2019 at 4:22pm PDT

   

  இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் இடையே தோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இங்கிலாத்தில் தோனி தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.  மனைவி சாக்ஷி, மகள் ஸிவா ஆகியோருடன் சில நண்பர்கள் மட்டுமே தோனி அழைத்திருந்தார். சக வீரர்களில் ஹர்திக் பண்டியா, கேதார் ஜாதவ் மட்டுமே பங்கேற்றனர். தோனி மகள் ஸிவா கேக்கை வெட்டினார். அதை தோனி முகத்தில்  பூசி  கொண்டாடினர்.  மகள் ஸிவாவுடன் சேர்ந்து தோனி புது வகையான டான்ஸ் ஆடினார். மகள் ஆடியதை போலவே ஆடி அசத்தினார். 

   

  View this post on Instagram

  A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on Jul 6, 2019 at 4:22pm PDT

   

  ஹர்திக் பண்டியா சமீப காலமாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் அடித்து வருகிறார். தோனியை பார்த்து அதை கற்றுக் கொண்ட அவர்,பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தோனியுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடிக் காட்டினார்.  இந்த பிறந்த நாள் கொண்டாடத்தில் கலந்து கொண்ட மற்றொரு கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ். அவர் ட்விட்டரில் சில புகைப்படங்களை பகிர்ந்து, தோனிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார். 

   

  View this post on Instagram

  Happy birthday Mahi bhai! Everyday spent with you is a chance to learn and grow. Thank you for being one of the biggest role models in my life ❤? Swipe left to see the fail one ?

  A post shared by Hardik Pandya (@hardikpandya93) on Jul 6, 2019 at 4:22pm PDT

   

  இந்நிலையில் ஓ.பி.எஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத், தோனிக்கு தன்னம்பிக்கை மனிதன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

  Heartiest Birthday Wishes to the India’s Pride, The Man of Self Confidence…
  Mr. MAHENDRA SINGH DHONI #OPR #OPRaveendranath #MP #MpTheni #Tamilnadu #AIADMK #Puthiyavidiyal #today pic.twitter.com/m4tyi2nMO0

  — OPRaveendranath (@OPRavindranath) July 7, 2019