தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் ஷெரின் தான்: கொந்தளிக்கும் தர்ஷன் காதலி!

  0
  13
  ஷெரின் - சனம் ஷெட்டி

  ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் என்று தர்ஷனின் காதலி சனம்  ஷெட்டி பரபரப்பு பேட்டி  ஒன்றை அளித்துள்ளார். 

  ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் என்று தர்ஷனின் காதலி சனம்  ஷெட்டி பரபரப்பு பேட்டி  ஒன்றை அளித்துள்ளார். 

  tharshan

  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து  தர்ஷன்  வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் மீள முடியாத  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து தர்ஷன் முதல் வெளியாக தனது காதலி சனம்  ஷெட்டியை சந்தித்தார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலானது. 

   

  இந்நிலையில் சனம்  ஷெட்டி ஆங்கில பத்திரிகை  ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று நம்பினேன். அவர் வெளியேறியது என்னால் நம்ப முடியவில்லை. லாஸ்லியாவுக்கு கூட கவின் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டார்கள் என்று வைத்து கொள்வோம். ஆனால்  ஷெரின் தர்ஷனை விட அதிக ஓட்டுகள்  வாங்கியிருக்கிறார் என்று கூறுவது நம்பமுடியவில்லை. இதில் ஏதோ மர்மம் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பியை உருவாக்கவே தர்ஷன் மற்றும் ஷெரீனுக்கு லவ் டிராக் ஒன்றை ஏற்படுத்தி ஒளிபரப்பினார்கள். தர்ஷன் என்னை  பற்றி பலமுறை கூறியுள்ளார். ஆனால்  அதை ஒளிபரப்பவில்லை. நான் தர்ஷன் வாழ்க்கையில் இருப்பதை  முழுவதுமாக மறைத்து விட்டார்கள். ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம்.  அவருடைய செயல்கள் போலியாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

  sanam

  இதைக்கண்ட வளைதளவாசிகள்  சிலர், உங்களை  நியாயப்படுத்த ஷெரினை குறை சொல்லாதீர்கள். நீங்கள் அளித்த பேட்டி தான் தர்ஷன் வெளியேற காரணம் என்று கூறி வசைபாடி வருகின்றனர்.