தர்பார் டப்பிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினி! டிச.7 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! 

  0
  4
  darbar rajinikanth

  தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இன்று முதல் தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார். 

  இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

   

   

  ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

   

   

  இந்நிலையில் லைகா நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ இன்று முதல் தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார் என்றும், தர்பார் படத்தில் தலைவர் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்ய அருணாசலம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

  பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்தவுடன் படக்குழுவிலுள்ள சிறுசிறு கதாபாத்திரங்கள் டப்பிங் பேசுவார்கள். இறுதியில்தான் படத்தின் கதாநாயகன் டப்பிங் பேசுவார். இதிலிருந்து டப்பிங்கின் இறுதிக்கட்ட பணியில் தர்பார் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நாக் ஸ்டூடியோவில் நடைபெற்றுவரும் டப்பிங் பணியில் பிஸியாகவுள்ளார்.