தர்பார் இசைவெளியீட்டு விழா அப்டேட்: லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  0
  8
  தர்பார்

  இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  darbar

  ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தில் முதல் சிங்கிள் டிராக்  சமீபத்தில் வெளியானது.  

  darbar

  நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு எனத் தொடங்கும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் மிரட்டும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. 

  இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் வரும் 7 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மாலை  5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.