தயிர் சாதத்தை நாய்க்குக் கொடுத்தால் மலேரியா சரியாகுமா? சாய் பாபா சொன்ன ரகசியம்!

  0
  3
  சாய் பாபா

  தன்னை காப்பாற்ற சாயிநாதன் ஒருவரால் தான் முடியும் என்று பாபாவிடம் ஓடோடி  வந்தார் பாலா

  ‘பாபா எங்கே இருக்கிறார், எப்படி இருப்பார்?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கான ஒரே பதில், ‘அவர் நமக்குள், நம்முடனேயே இருக்கிறார்’ என்பதுதான். நமக்குள்  இருந்து நம்மை வழிநடத்தும் சக்தி அவர் தான். 

  sai baba

  நீ கேட்கும் அனைத்தையும் நான் நடத்தி தருவேன். அதற்கு என் மீது  உனக்கு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்று கூறியுள்ளார்  பாபா. பாபா சொல்லும் தீர்வுகளை, சாதாரண அறிவைக்கொண்டு தெளிய முடியாது. சில நேரங்களில் அவை சம்பந்தமற்றவைபோலத் தோன்றும். ஆனால்  அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு  யார் அதை செய்கிறார்களோ அவர்கள் உடனடியாக பிரச்னையிலிருந்து விடுபடுகிறார்கள்.

  sai baba

  அப்படி தான் பாலா என்கிற பக்தருக்கு மலேரியா ஏற்பட்டது.  எல்லா வைத்தியங்கள் செய்து பார்த்தும் எந்த பலனும் கிடைக்காததால், தன்னை காப்பாற்ற சாயிநாதன் ஒருவரால் தான் முடியும் என்று பாபாவிடம் ஓடோடி  வந்தார் பாலா. உடனே பாபாவும்  பாலாவை ஆசிர்வதித்து, நீ எதற்காக வந்துள்ளாய் என்று தெரியும். உடனே தயிர்சாதம் செய்து அதை லட்சுமி கோயில் அருகில் நிற்கும் ஒரு கறுப்பு நாய்க்குக் கொடு என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.

  sai baba

  ‘தயிர் சாதத்தை நாய்க்குக் கொடுப்பதன் மூலம் மலேரியா சரியாகுமா? லட்சுமி கோயில் அருகில் நாய் நிற்குமா… அதுவும் கறுப்பு நாய் ?’ போன்ற எந்த சந்தேகமும் கேள்வியும் இல்லாமல் வீட்டுக்கு ஓடிய பாலா, வேகவேகமாக வீட்டிற்கு வந்து தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயிலுக்குச் சென்றார். பாபா சொன்னதைப் போலவே அங்கே ஒரு கறுப்பு நாய் நின்றது. பாலா அதற்கு தயிர்சாதத்தை நாய்க்கு கொடுக்க நாயும் அதை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. அடுத்த கணமே பாலாவின் மலேரியா குணமாகிவிட்டது. 

  sai baba

  உண்மையில் நாய்க்குத் தயிர்சாதம் கொடுத்ததால் தான் பாலா குணமானாரா? இல்லவே இல்லை… பாபா சொல்லை கேட்டு அதை நம்பிக்கையோடு  செய்தது தான் பாலாவின் நோய் குணமாக காரணம். எந்த அளவிற்கு பாலா தன்னை  நம்புகிறான் என்ற பாபாவின் சோதனையை கெடுத்துவிடாதபடி  பாலா அதை செய்து நிவாரணம் பெற்றார். பாலா மட்டுமல்ல, சாயி நாதரின்  பாதங்களில் சரணடைந்துவிட்ட கணத்திலேயே நம் பிரச்னைகளிலிருந்து விடுதலையாகி விடுகிறோம். தாமதம் ஆவதாக  நாம் கருதும் காலம் நம் நம்பிக்கையைச் சோதிக்க பாபா செய்யும் திருவிளையாடலே தவிர வேறெதுவுமில்லை.