தயாரிப்பாளரின் நெஞ்சில் எட்டி மிதித்த பிரபல தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர்…ப்ராக்டீஸ் எடுக்குறீங்களா பாஸ்?

  0
  1
  ஜாக்குவார் தங்கம்

  கட்டைப் பஞ்சாயத்துகளுக்குப் பேர்போன ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் தன்னைக் காலால் எட்டி மிதித்ததாக தெலுங்குப் பட தயாரிப்பாளர் சென்னை காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.

  கட்டைப் பஞ்சாயத்துகளுக்குப் பேர்போன ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் தன்னைக் காலால் எட்டி மிதித்ததாக தெலுங்குப் பட தயாரிப்பாளர் சென்னை காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.

  jaguar thangam

  தமிழ், தெலுங்கு உட்பட ஏழெட்டு மொழிகளில் ஆயிரம் படங்களுக்கும் மேல் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியிருப்பவர் ஜாகுவார் தங்கம். இவர் சிலபல வருடங்களுக்கு முன்பு தனது மகன் சூர்யாவை ஹீரோவாக்கி ‘இந்தியா’ என்ற படத்தைத் துவங்கினார். இப்படம் தொடர்பாக ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் பாக்கியிருக்கும் நிலையில் இப்படத்திற்கான இந்தி மொழி உரிமம் தருவதாக ரூ.5 லட்சம் பெற்று ஏமாற்றியது குறித்து கேட்ட தன்னை, காலால் எட்டி உதைத்து தாக்கியதாக ஜாக்குவார் தங்கம் மீது ஆந்திர சினிமா தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

  ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அல்டாப் (59), சினிமா தயாரிப்பாளரான இவர் புதிய படம் தொடர்பாக வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். இவர், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், எம்ஜிஆர் நகர் அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய படத்தை எடுப்பதாக என்னிடம் கூறினார். அந்த படத்திற்கு இந்தி மொழி உரிமம் எனக்கு தருவதாக கூறினார். 

  jaguar thangam

  அதன்படி, நான் அவரிடம் படத்திற்கான உரிமத்திற்காக ரூ.11 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டேன். அதன்படி முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தை ஜாக்குவார் தங்கத்திடம் ரொக்கமாக கொடுத்தேன். ஆனால் அவர் இந்தியா என்ற படம் தற்போது எடுப்பதாக தெரியவில்லை.இதனால் நான் இந்தி மொழி உரிமத்திற்கான ஒப்பந்தத்தை திரும்ப பெற்று கொள்வதாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் ஜாக்குவார் தங்கத்தை அவரது வீட்டில் நேரில் சென்று கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டேன். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என்று கூறி, காலால் என் மார்பில் எட்டி உதைத்து சட்டையை பிடித்து கீழே தள்ளி அசிங்கமாக திட்டினார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, போலீசார் ஜாக்குவார் தங்கத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.