தம்பி சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி….

  0
  1
  முகேஷ் அம்பானி

  திவால் நடவடிக்கையில் உள்ள அனில் அம்பானியின் ஆர்.காம். நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.

  அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்.) கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. வங்கிகள் மற்றும் கடன்தாரர்களிடம் வாங்கிய ரூ.45 ஆயிரம் கோடியை திரும்ப செலுத்த முடியாததால் தன்னை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி ஆர்.காம். தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. இதனையடுத்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஆர்.காம். நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.

  ஆர்.காம்

  ஆர்.காம். சொத்துக்களை வாங்க ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வாங்க ஆர்வம் தெரிவித்தன. இந்நிலையில் பெரும் கோடீஸ்வரர்களான ஸ்டெர்லைட் குழுமத்தின் அனில் அகர்வால் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரும் ஆர்.காம். சொத்துக்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  அனில் அம்பானி

  இதுதவிர, டி.பி.ஜி. ஆசியா, அசெட் கேர் அண்டு கன்ஸ்ட்ரக்சன் என்டர்பிரைசஸ், அமெரிக்கன் டவர் நிறுவனத்தின் இந்திய நிறுவனமான ஏ.டி.சி. டெலிகாம் இன்ப்ராஸ்ட்ரக்சர் , ஏ.ஆர்.சி., வார்தே பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அனில் அம்பானியின் சொத்துக்களை வாங்க விரும்புவதாக மனு தாக்கல் செய்துள்ளனர்.