தமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்

  0
  1
  சமந்தா கண்ணன்

  இங்கிலாந்த நாட்டைச் சேர்ந்த பெண் “மலர்ந்தும் மலராத” என்ற தமிழ் பாடலை பாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

  இங்கிலாந்த நாட்டைச் சேர்ந்த பெண் “மலர்ந்தும் மலராத” என்ற தமிழ் பாடலை பாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

  எம்.எஸ் வியின் இசையில் 60 களில் வெளிவந்தது மலர்ந்தும் மலராத என்ற பாடல். அண்ணை தங்கையின் பாசத்தை வெளிகாட்டும் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார். டி.எம்.எஸ், சுசிலாவின் மென்மையான குரலில் வெளியான இப்பாடலை இன்றளவிலும் பலரும் பாடி மகிழ்ந்து வருகின்றனர். 

  மலர்ந்தும் மலராத பாடல்

  இந்நிலையில் தமிழ்நாட்டின் மருமகளும், இங்கிலாந்தை சேர்ந்த  சமந்தா என்ற பெண்ணும் இந்த பாடலை பாடியுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழை அதித ஆர்வத்துடன் கற்று வரும் இவர் இந்த பாடலை தமிழில் அழகாக பாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  இந்த விடீயோ வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

  சமந்தாவின் இந்த முயற்சிக்கு பலரும் தங்கது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.