தமிழில் ரீமேக்காகும் ரங்கஸ்தலம்: ஹீரோ யாருன்னு தெரியுமா?

  0
  1
   ரங்கஸ்தலம்

  சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவி பிரசாத் இசையமைத்திருந்தார்

  தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ரங்கஸ்தலம் படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். இயக்குநர்  சுகுமார் இயக்கிய இப்படத்தில்  சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவி பிரசாத் இசையமைத்திருந்தார்.  இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

  ranagasthalam

  இந்நிலையில் தெலுங்கில்  சூப்பர் ஹிட்டான இப்படம் தமிழில் ரீமேக்காகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் வாங்கியுள்ள நிலையில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குகிறார்.

  lawrence

  தற்போது லாரன்ஸ் காஞ்சனா படத்தை பாலிவுட்டில் அக்ஷய்குமார் வைத்து இயக்கி வருகிறார். அதனால் இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு ரங்கஸ்தலம் ரீமேக்கில் நடிப்பார் என்று தெரிகிறது. 

  lingusamy

  முன்னதாக லிங்குசாமி தனியார் நிதி நிறுவனத்தில் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஒருகோடி ரூபாய் கடன் வாங்கி அதை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது  நிதி நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.