தமிழர் என்று சொல்லாதீர்கள்! தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்க! மகளிர்தின விழாவில் மனம்திறந்த மய்யம் நாயகன்!?

  0
  2
   நடிகர் கமல் ஹாசன்

  எனக்கு பிறகு கட்சி தலைமை பதவிக்கு எனது குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  சென்னை: எனக்கு பிறகு கட்சி தலைமை பதவிக்கு எனது குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், போட்டியிடுவதாக  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்தார். அந்த வகையில் கமல் ஹாசன்   தனது கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். 

  kamal ttn

  இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன்  மகளிர்  தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அப்போது நடிகை கோவை சரளா  கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார். 

  kamal

  இதை தொடர்ந்து மைக்கைப் பிடித்த கமல், ‘ஒழுக்கமும்,கல்வியும் தாயின் வழியேதான் வரும்.இப்போதுள்ள அரசியல்வாதிகள் தமிழக மக்களை ஏழ்மை நிலையில் இருக்கும்படியே வைத்திருக்கிறார்கள்.மக்கள் அப்படி இருந்தால்தான் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியும்.ஒரு நாள் ராஜபோகமாக விருந்து வைத்துவிட்டு,வருடம் முழுக்க பட்டினி கிடக்கும் விளையாட்டு எங்களுக்கு பிடிக்காது!ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசம் இங்கே பெரிய அளவில் இருக்கிறது.அதை மாற்ற வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஒலிக்க வேண்டும்’ என்று சொன்னவர்,அடுத்து பேசியது அனைத்தும் முரண்பாடுகளின் உச்சம். எனக்குப் பிறகு என் மகளோ,மச்சினனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்’என்று போகிற போக்கில் வாரிசு அரசியல் பற்றி பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட தமிழ் தேசியம் பேசும் ஆட்களை அட்டாக் பண்ணினார். தமிழன் என்பது எனது விலாசம்.அதை வைத்துக்கொண்டு இங்கு தமிழன் என்று சொல்லி வாய்ப்புகேட்ககூடாது…என் தகுதி இதுதான் என்று சொல்லி வாய்ப்பு கேளுங்கள்’! என்று முடித்தார். 

  முன்னதாக ‘ குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் . மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தி.மு.க.வை மறைமுகமாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.