தமிழன் உப்பு போட்டு சாப்பிடுறவன்…சாதாரண உப்பு இல்லடே தூத்துக்குடி உப்பு @டாக்டர் தமிழிசை

  0
  1
  தமிழிசை சௌந்தராஜன்

  தமிழர்கள் மோடிக்கு ஓட்டுப்போடாமல் பா.ஜ.க.வை சிங்கிள் சீட்டில் கூட ஜெயிக்கவிடாமல் தோற்கடித்ததற்கான பலனை அனுபவிப்பார்கள். அதற்கான விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் ‘இன்னும் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் டாக்டர் தமிழிசை.

  ‘தமிழர்கள் மோடிக்கு ஓட்டுப்போடாமல் பா.ஜ.க.வை சிங்கிள் சீட்டில் கூட ஜெயிக்கவிடாமல் தோற்கடித்ததற்கான பலனை அனுபவிப்பார்கள். அதற்கான விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் ‘இன்னும் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் டாக்டர் தமிழிசை.

  இந்திய அளவில் தேர்தல் வெற்றியில் பா.ஜ.க. பெரும் சாதனையைப் படைத்திருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு சீட்டில் கூட ஜெயிக்கமுடியாமல் அசிங்கப்பட்டிருக்கிறது.இதற்காக மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள் ட்விட்டர் பக்கத்தில் ,… தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை #தூத்துக்குடி_உப்பு.@DrTamilisaiBJP என்கிற செய்தியை ட்ரெண்டிங் ஆக்கிக் கொண்டுவருகிறார்கள்.

  அச்செய்தியைக் கண்டு ஆத்திரம் கொண்ட டாக்டர் தமிழிசை பதிலுக்கு,…உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும் உயர்ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு இதயநோய் வரும். உங்கள் குடும்படாக்டரை கேட்டால் உண்மை புரியும் ?இழப்பு. யாருக்கு ? காலம் பதில் சொல்லும்?’ என்று ஒரு அரசியல்வாதிக்குரிய எந்த பக்குவமும் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லிவருகிறார்.

  அப்பதிவுக்குக் கீழே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான கமெண்டுகளில் ‘விடுக்கா விடுக்கா நமக்கு வெற்றிகரமான தோல்விகள்ங்குறது சகஜம் தானே’ என்று சிலர் ஆறுதலும் தேறுதலும் சொல்லிவருகிறார்கள்.