தமிழத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 8136 பேரை கைது செய்தது போலீஸ்!

  0
  2
  TN Police

  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக சுமார் 8136 பேரை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக சுமார் 8136 பேரை போலீசார் கைது செய்தனர்.

  தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

  ttn

  இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக 1434 வழக்கில் சுமார் 8136 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பீதியை கிளப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்று அறிகுறி உடைய 6 பேர் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். தமிழக மக்களிடையே இன்னும் கொரோனா பாதிப்பு தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாததை இந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன.