தமிழக பாஜக தலைவராக தவிப்பு… நித்யானந்தாக்களை தேடும் நிர்வாகிகள்..!

  12
  நித்யானந்தா

  ப்படியாவது நித்யானந்தாக்களின் தயவில் பாஜக தலைவராகி விடவேண்டும் என துடித்து வருகிறார் நயினார் நாகேந்திரன்.

  அதிமுகவில்  அமைச்சராக இருந்த போது 5 ஆண்டுகளில் மூன்று துறைகளுக்கு பவர்புல் அதிகாரத்துடன் இருந்தவர் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் சூழ்நிலை சரியில்லை என்பதால் பாஜகவில் இணைந்த அவர் பூஜை, பரிகாரத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். 

  இப்போது மத்தியில் ஆட்சி நடந்தும் தனக்கு அதிகாரம் இல்லையே என்ற ஆதங்கம். ஏற்கனவே மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வாய்ப்பு கிடைத்த போதிலும் வெற்றியை ருசிக்க முடியவில்லை. இதனால் பாஜகவில் தற்போது காலியாக இருக்கும் தமிழக மாநில தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார். பழம் நழுவிப் பாலில் விழாதா என்பதற்காக கோயில்களில் பரிகார பூஜை செய்து வருகிறார். 

  Nainar nagendran

  சமீபத்தில் பாபநாசம் கோயிலுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் பூஜை செய்து வழிபட்டுள்ளார். மாநில தலைவர் பதவியை குறி வைத்துத்தான் இந்த பூஜையை அவர் நடத்தியதாக கோயில் வட்டாரங்கள் தகவல். யாருக்கு யோகம் அடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் எப்படியாவது நித்யானந்தாக்களின் தயவில் பாஜக தலைவராகி விடவேண்டும் என துடித்து வருகிறார் நயினார் நாகேந்திரன்.