தமிழக சட்டசபை தேர்தலில் வீட்டிலிருந்தே ஓட்டு போடலாம்! அறிமுகமாகும் பலே திட்டம்!

  0
  1
  வாக்குப்பதிவு

  தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலுமே படித்த மாவட்டங்களில் கூட வாக்கு சதவிகிதம் குறைவாகவே பதிவாகிறது.

  தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலுமே படித்த மாவட்டங்களில் கூட வாக்கு சதவிகிதம் குறைவாகவே பதிவாகிறது. தற்போது நாடு முழுவதும் தேர்தல் காலங்களில் ராணுவத்தில் பணியாற்றும் பாதுகாப்பு வீரர்கள், நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அவர்களது வாக்குகளை தபால் மூலம் அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தபால் ஓட்டுக்கள் தான் முதலில் எண்ணப்படுகின்றன.

  வாக்குப்பதிவு

  ஒவ்வொரு தேர்தலில் வாக்குப்பதிவுகள் தொடர்ந்து குறைந்து வருவதை சரிசெய்து, வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கான வழிமுறைகளை யோசித்து, திட்டமிட்டு வருகிறது தேர்தல் ஆணையம். 
  அதன் ஒரு பகுதியாக புதிய திட்டமொன்றை வகுத்து, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் படி, நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருந்தாலும், அவர்களது உடல்நிலை இயலாமையின் காரணமாக அவர்களால்  வாக்குச்சாவடிக்கு வரமுடியாத நிலை உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர்களது வாக்குகள் பதிவாகாமலேயே இருக்கின்றன. இந்நிலையைத் தவிர்க்க, அவர்களுக்கும் தபால் ஓட்டுக்கள் போட வழிவகுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

  வாக்குப்பதிவு

  தேர்தல் ஆணையத்தின் இந்த வேண்டுகோலை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் விதிமுறைகளில் இது குறித்து திருத்தம் கொண்டு வந்துள்ளது.

  Postal votes

  புதிய திருத்தத்தின் படி வரும் சட்டசபை தேர்தல் முதல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், தபால் மூலம் தங்களது ஓட்டுக்களைப் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.