தமிழக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கலாநிதி மாறனுக்கு முதலிடம்!

  0
  22
  kalanithi maran

  சோஹோ செக்யூர் நிறுவனத்தின் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 7,100 கோடி ரூபாய் மதிப்புடன், போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

  தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புடன் உள்ளவர்கள் பட்டியலை ஹாருன் ரிப்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஐஐஎஃப்எல் வெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், சன் டி.வி-யின் கலாநிதி மாறனுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  சன் நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறன் 19 ஆயிரத்து 100 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கலாநிதி மாறன் 43- வது இடத்தை பிடித்துள்ளார்.

  vembu-family

  சோஹோ செக்யூர் நிறுவனத்தின் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 7,100 கோடி ரூபாய் மதிப்புடன், போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
  ஹாட்சன் அக்ரோ ப்ராடெக்ட்சின் (ஆரோக்கிய பால், அருண் ஐஸ்கிரீம்) சந்திரமோகன் 7 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5- வது இடத்தை பிடித்துள்ளார். கவின் கேரின் சி.கே.ரங்கநாதன் 6- வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5,300 கோடியாக உள்ளது. 
  கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 62 சதவிதிதத்தினர் அதாவது 34 பேர் சென்னையில் வசிப்பவர்கள். கோவையிலிருந்து 12 பேரும் திருப்பூரிலிருந்து 4 பேரும் சேலத்திலிருந்து 3 பேரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.