தமிழக கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ்… ஆய்வு சொல்லும் உண்மை என்ன..!?

  0
  4
   நிபா வைரஸ்

  கடந்த இரண்டு மாதங்களாகவே கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வைரலாகி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியுடன் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  கடந்த இரண்டு மாதங்களாகவே கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வைரலாகி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியுடன் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  nipah virus

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை அடிக்கடி சோர்வடைந்திருக்கிறது. அதனால், சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துப்போய் காட்டியிருக்கிறார்கள்.அதன் தொடர்ச்சியாக,காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
  ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து  புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்

  nipah virus

  ரத்த மாதிரியின் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி தெரிவிக்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவ மனை தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள்.ஏற்கனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இது போன்ற அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு நிபா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.