தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை! ரஜினிக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்!! 

  0
  2
  இபிஎஸ்

  தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

  தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

  இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ திருவள்ளுவருக்கும், எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது. எனவே அவரையும் என்னையும் காவியாக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் தலைமை வெற்றிடமாக உள்ளது” என பேசினார்.

  eps

  இதற்கு பதிலளிக்கும் விதமாக் விக்கிரவாண்டியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சியமைக்கும். அதிமுகவின் கூட்டணி பலம்பொருந்தியது. யாரும் அதனிடம் நெருங்க முடியாது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின். அரசியலை சிலர் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் அரசியலில் திடீரென பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது” எனக் கூறினார்.