தமிழக அரசியலில் புதுமை… தசவதாரம் எடுக்கப்போகும் கமல்..? ஆண்டவா இது மட்டும் நடந்து விடக்கூடாது..!

  0
  24
  கமல் ஹாசன்

  இது மட்டும் நடந்தால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் நிலைமை என்ன ஆவது..? அட ஆழ்வார்பேட்டை ஆண்டவா..!

  தனது மீசையில் மட்டுமே எல்லா மண்ணும் ஒட்டியே ஆக வேண்டும் எனதிட்டமிட்டு வருகிறார் கமல். பிரச்சார வியூகர் பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம், விரைவில் தொலைக்காட்சி தொடங்கப்போவது என தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை பிடிக்க பல வியூகங்களை அமைத்து வருகிறார் கமல். 

  kamal

  நாங்குநேரி- விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை’ என  அறிவித்து விட்டார். நவம்பர் முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அசுர வேகத்தில் தொடங்கப்போகிறார்.  இதற்காக, பேச்சாளர்களுக்கு இப்போதே பயிற்சி அளித்து வருகிறது மக்கள் நீதி மய்யம்.

  Kamal

   தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2ம் தேதி, கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. கிராம சபையில், எப்படி பேச வேண்டும்? எந்தெந்த கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்றும், கிராம சபையின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தும் வகையிலும்,  பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  பயிற்சி முகாமில், பொதுச் செயலர், மவுரியா, நடிகர் நாசரின் மனைவி, கமீலா நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மக்கள் நீதி மையம் கட்சி பிரசாரத்தின் போது, கமலை தவிர மற்றவர்களுக்கு கூட்டம் கூடுவதில்லை. அதனால், பிரசார பீரங்கிகளை தயார்படுத்தும் பணியிலும், மக்கள் நீதி மையம் இறங்கியுள்ளது.

  kamal

  அடுத்து அவரது கட்சியில் இனி குழப்பம் இல்லாமல் தெளிவாக பேசும் நிறைய கமல் ஹாசன்களை பார்க்க இருக்கிறது தமிழகம்.  தன்னை போல வேடம் போட்டு பேச்சாளர்களை கமல் ஹாசன் இறக்கி விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தசவதாரம் எடுத்தாவது தமிழக முதல்வராகி விடத் துடிக்கிறார் கமல். இது மட்டும் நடந்தால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் நிலைமை என்ன ஆவது..? அட ஆழ்வார்பேட்டை ஆண்டவா..!